கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சுகுனாபுரம் பகுதி உள்ளது. இந்த சுகுணாபுரம் மலை பகுதிகளில் எண்ணற்ற மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுகுணாபுரம் கிழக்குப் பகுதியில் தன்னாசி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு
இரவு தன்னாசி ஆண்டவர் கேட்டின் மேல் ஏதோ மிருகம் படுத்திருந்தை பாரத்த ஒருவர் அது சிறுத்தை என அறிந்து அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த போது கோயிலின் கேட்டின் மேல் கால் தடமும் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதையும் உறுதி செய்து அவ்விடத்திற்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என அந்த கோவில் பகுதி கேட்டை பூட்டி கண்காணித்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த வாரம், கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை அடித்து கொன்றது. காலையில் இதை கண்ட கல்லூரி ஊழியர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை கால்தடத்தை ஆய்வு செய்தனர்.மேலும் அந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
வீடியோவை இங்கே காணலாம்:
தொடர்ந்து கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பிள்ளையார்புரம், கோவைபுதூர், குனியமுத்தூர், பி.கே புதூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை B.K. புரம், குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர்,உதவி வன பாதுகாவலர் தலைமையில் வந்த வனத்துறையினர் சிறுத்தை பாழடைந்த குடோனில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவ குழுவும் 2 கூண்டுகளும் கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை தப்பிவிடாமல் இருக்க வலையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் சிறுத்தை பிடிபடலாம் என்பதாலும் கூண்டிற்குள் சிக்காமல் தப்ப முயற்சித்தால் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கவும் வனதுறையினருடன் மரூத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR