சென்னை: தமிழகம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு (Lockdown) வீதியை ஆகஸ்ட் இறுதி வரை தொடரும் எனத் தகவல். முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) தலைமையில் வரும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிக்க பரிசீலிக்க உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பொது போக்குவரத்து மற்றும் மால்கள் மற்றும் சினிமா அரங்குகள் மீதான தடை நடைமுறையில் தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக மாவட்டங்களில் கோவிட் -19 (COVID-19) பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போதைய ஊரடங்கு காலம் முடிவுக்கு வர உள்ளதால், ஜூலை 31 க்கு பிறகு, ஊரடங்கு காலம் (Lockdown extension in Tamil Nadu) நீட்டிக்கப்படலாம். ஆனால் இன்னும் சில தளர்வுகள் அளிக்க பரிசீலிக்கப்படலாம். ஆனால் பொது இடங்கள் அதிகமாக கூடுவது மற்றும் பொது போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் குறைந்தது அடுத்த மாதம் இறுதி வரை இருக்கும் என்று ஒரு மாநில அரசு அதிகாரி கூறினார்.


ALSO READ | இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 6,993 பேருக்கு கொரோனா உறுதி..!


ஒராகடம் அருகே ரூ .250 கோடி ஏரோ ஹப் திட்டத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீபெரும்புதூரிலுள்ள வானூர்தி தொழிற்பூங்காவில் டிட்கோ, டைடல் (Tidco and Tidel Park) நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் ரூ.250 கோடியில் அமையவுள்ள, பொறியியல் வடிவமைப்புக்கான AERO HUB உயர்நுட்ப தொழில்மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


அதேபோல தொழில்துறை சார்பில் ரூ.2368 கோடியில் 24870 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு, புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 11 நிறுவனங்களின் உற்பத்தியை முதல்வர் (Chief Minister of Tamil Nadu) அவர்கள் துவக்கி வைத்தார்.


ALSO READ | ஆகஸ்ட் 5 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முக கவசம்: TN Govt


தமிழகத்தில் நேற்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 6,993 பேரில் சென்னையில் மட்டும் 1,138 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.