தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரிப்பு...!
தமிழகத்தில் இன்று மேலும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 6,956 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 37 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 6,993 பேரில் சென்னையில் மட்டும் 1,138 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 117 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 59) உள்ளன. அதில், இன்று மட்டும் 63,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 24,14,713 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,215 பேர் ஆண்கள்,4,162 பேர் ஆண்கள், 2,831 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,33,930 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 86,763 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 5,723 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,249 ஆக உள்ளது.
தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 77 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,571 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,896 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 11,042 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,82,286 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 27 ஆயிரத்து 388 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ | ஆகஸ்ட் 5 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முக கவசம்: TN Govt.,
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்....
சென்னையில் 1,138 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்றுதிருவள்ளூரில் 474 பேருக்கும், செங்கல்பட்டில் 448 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 362 பேருக்கும், தூத்துக்குடியில் 349 பேருக்கும், விருதுநகரில் 338 பேருக்கும், கோவையில் 313 பேருக்கும், தேனியில் 280 பேருக்கும், ராணிப்பேட்டையில் 273 பேருக்கும், திருவண்ணாமலையில் 267 பேருக்கும், மதுரையில் 249 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,821 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, விருதுநகரில் 628 பேரும், ராணிப்பேட்டையில் 397 பேரும், செங்கல்பட்டில் 282 பேரும், தூத்துக்குடியில் 229 பேரும், திருவள்ளூரில் 211 பேரும், கோவையில் 202 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இன்று 21 பேரும், செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர், வேலூர், விருதுநகரில் தலா 6 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், கோவை, தென்காசியில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கையில் தலா 2 பேரும், திண்டுக்கல், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சியில் தலா ஒருவரும் என 77 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.