அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை மழைக்காலம் தொடர்கிறது. சமீபத்தில் டவ்-தே புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது. கன்னியாகுமரி மற்றும் பல கடலோர மாவட்டங்களில் கன முதல் அதிகன மழை பெய்தது.
இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை (Rain) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் முக்கியமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மற்ற கடலோர மாவட்டங்களிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. மார்த்தாண்டம், களியக்காவிளை, குழித்துறை உட்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கொடைக்கானலிலும் நல்ல மழை பெய்தது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இது நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
ALSO READ: Cyclone Tauktae: புயலின் ஆவேசம், மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவின் பரபர வீடியோ!
கன்னியாகுமரியில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது. தமிழகம் தவிர புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சமீபத்தில் அரபிக் கடலில் உருவாகி, குஜராத்தில் கரையைக் கடந்த டவ்-தே புயலைத் (Cyclone) தொடர்ந்து தற்போது மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 24 ஆம் தேதி புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மேலும் வலுப்பெற்று இந்தியாவில் ஒரிசா மற்றும் நம் அண்டை நாடான வங்க தேசம் இடையில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த புயலின் தாக்கத்தால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பரவலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR