இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD
மீனவர்கள் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என்று, எங்கு எவ்வளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என காணலாம்:
19.11.2021 கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஈரோடு சேலம் தர்மபுரி வேலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் வடமாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை (Rain) பெய்யக்கூடும்.
20.11.2021: நீலகிரி நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி சேலம் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ALSO READ:Monsoon: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரிக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை
21.11.2021: அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி கடலூர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22,23.11.2021: தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை (Chennai) பொருத்தவரை அடுத்த அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் (Fishermen) அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வட தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று விசா வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று மாலை நான்கு மணி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ALSO READ:TN Rain Live Update: மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் ALERT
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR