மனைவிக்கு ஆறுதலாக இருந்த தந்தை - ஆக்ரோஷத்தில் கட்டையால் அடித்து கொன்ற மகன்
நாமக்கல் ராசிபுரம் அருகே மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாமல் இருப்பதற்கு தந்தையே காரணம் என நினைத்த மகன் அவரை கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயம் பார்த்து வந்தார். இவருக்கு பாலமணிகண்டன் மற்றும் பரணிகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலசுப்ரமணியன், தன்னுடைய அக்கா மகள் லாவண்யாவை மூத்த மகன் பாலமணிகண்டனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடந்த 1 மாதமாக பாலமணிகண்டன் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலமணிகண்டனின் மனைவி கோபித்துக்கொண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஊர் திரும்பிய லாவண்யா தன்னுடைய குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருப்பூர் சென்றுவிட்டார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பாலமணிகண்டனின் ஆதங்கம் அவர் தந்தையின் மீது திரும்பியது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் போது பாலசுப்பிரமணியன்தான் தடுத்திருக்கிறார். மருமகளை மகள் போல் நினைத்தவர் லாவண்யாவின் கண்ணீருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். இதெல்லாம், பாலமணிகண்டனுக்கு தவறான கண்ணோட்டத்தை வரவழைக்க, மனைவி தன்னை விட்டு செல்ல தந்தைதான் காரணம் என்று நினைத்து ஆத்திரமடைந்திருக்கிறார்.
இதனால் தந்தையை பழி வாங்க நினைத்தவர், அவரை கொலை செய்யும் அளவுக்கு முடிவெடுத்திருக்கிறார். அதற்காக உடன் பிறந்த தம்பியான பரணிகுமார் மற்றும் அக்கா மகன் சீனிவாசன் ஆகிய இருவரின் மனதையும் மூளை சலவை செய்தவர் அவர்களையும் கொலைக்கு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்.
மேலும் படிக்க | நாட்டையே அலறவிட்ட செல்போன் திருட்டு - 2 வருடங்களாக தொடரும் கண்டெய்னர் கொள்ளையர்கள்!
சம்பவத்தன்று, தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தந்தையை மூன்று பேரும் சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலமணிகண்டன், தம்பி பரணிகுமார் மற்றும் அக்கா மகன் சீனிவாசன் ஆகிய 3 பேரும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | CRIME : தந்தையை கொன்று புதைத்த மகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR