ஓபிஎஸ் திமுகவின் B டீம்... மருது அழகராஜ் கூலிக்கு மாறடிப்பவர் - ஜெயக்குமாரின் அடுக்கடுக்கான விமர்சனம்
ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் B டீமாக இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடக்கும் தலைமை ரேஸில் பழனிசாமி பன்னீரைவிட முன்னே இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைக்கும் ஓபிஎஸ் நீதிமன்ற படிகளில் மீண்டும் ஏறியுள்ளார். இந்தச் சூழலில் நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகராஜ் ஓபிஎஸ் கூடாரத்துக்கு சென்றிருக்கிறார்.
இதற்கிடையே ஓபிஎஸ்ஸின் மகன் ஜெய பிரதீப் தனது முகநூல் பக்கத்தில் கொடநாடு விவகாரம் குறித்து பேசியிருந்தது இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பன்னீர்செல்வம் திமுகவின் B டீம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல கட்சிகளுக்கு சென்ற மருது அழகுராஜ் தற்போது கூலிக்கு மாறடிக்கும் செயலாக பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
நமது அம்மா நாளிதழில் நிதி கையாடல் முறைகேட்டில் அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அடையாள அட்டை இல்லாத யாரும் பொதுக்குழுவில் அனுமதிக்கப்படவில்லை. எனவே கூட்டம் குறித்து மருது தவறாக பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | ஜீ நியூஸ் தொகுப்பாளரை கைது செய்ய முயன்ற சத்தீஸ்கர் காவல்துறை: காரணம் என்ன
கொடநாடு கொலை, கொள்ளையை செய்தவர்களை போர்க்கால அடிப்படையில் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்படி தொடர் குற்றங்களை செய்தவர்களை ஜாமீனில் எடுத்தது திமுகதான்.
ஓபிஎஸ் கட்சி விரோத செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது மகன் திமுகவிற்கு ஆதரவாக பேசுவதை தொண்டர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். திமுகவின் B டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்.
ஜூலை 11ஆம் தேதி நிச்சயம் பொதுக்குழு நடக்கும். சசிகலாவும், தினகரனும் அதிமுகவுக்கு திரும்ப முடியாது. அவர்கள் ஊர் ஊராக செல்வதெல்லாம் வீண்தான்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR