‘உங்க சீனியர் என்கிற முறையில் வாழ்த்துகிறேன்’ - மாநிலக் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் ப்ளாஷ்பேக்

Mk Stalin Speech At Presidency College : தான் படித்த மாநிலக் கல்லூரியில் ஒரு சீனியராக அனைவரையும் வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரை!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 5, 2022, 03:31 PM IST
  • மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
  • சீனியர் என்கிற முறையில் வாழ்த்தி மாணவர்கள் மத்தியில் உரை
  • ஒரு பட்டத்தோடு நிறுத்தாதீர்கள் என மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ‘அட்வைஸ்’
‘உங்க சீனியர் என்கிற முறையில் வாழ்த்துகிறேன்’ - மாநிலக் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் ப்ளாஷ்பேக்  title=

சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரையின் சாராம்சங்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.

‘அறிவு சொத்துக்களை உருவாக்கி தரும் மகத்தான கல்லூரியாக மாநில கல்லூரி திகழ்கிறது’

மேலும் படிக்க | தமிழர்களை பிரிக்கும் சக்திகள் அதிகமாகி இருக்கின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘சமூக நீதி தத்துவமே பிள்ளைகளின் கல்வி இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்டது தான். படியுங்கள்...ஒரு பட்டத்தோடு நிறுத்தி விடாதீர்கள்’

‘56 விழுக்காடு பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர். இது தான் திராவிட இயக்கத்தின் சாதனை’

‘கல்வியை கடல் என கூறுவார்கள். அந்தக் கடலுக்கு எதிரில் இருக்க கூடிய கல்லூரிதான் மாநிலக் கல்லூரி’ 

‘1840 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி...சென்னை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்னமே உருவானது. நான் படித்த மாநில கல்லூரி நிகழ்சியில் பங்கேற்பதில் இருமாப்படைகிறேன். உங்களது சீனியர் எனும் அடிப்படையில் மாணவர்களை வாழ்த்துகிறேன்...’

mk stalin

‘மாநில கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடபிரிவு பயின்ற நிலையில் படிப்பில் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள முடியவில்லை’ 

மிசா காலத்தில் ஓராண்டு சிறையிலிருந்த போது போலீஸ் பாதுகாப்போடு இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன்.’

‘திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளான சர்.பிடி.தியாகராயர், டி.எம்.நாயர் ஆகியோர் இந்த கல்லூரி படித்தவர்கள்’

மேலும் படிக்க | 55 ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு எதற்கு விளம்பரம் - ஸ்டாலினின் அசத்தல் பேச்சு

‘2000 பேர் அமரும் வகையில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும். அதற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும். அந்த அரங்கத்திற்கு தயாநிதியும் உதயநிதியும் நிதி அளிக்க வேண்டும்’

‘மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விடுதி அமைத்து தரப்படும்.’

students

‘கடந்த ஓராண்டில் பள்ளிக் கல்வித்துறை துள்ளி எழுந்துள்ளது’ 

இவ்வாறு மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News