கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணம் என்பது துரதிருஷ்டவசமானது என்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை சேர்ந்த என யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை தொடரும் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சமூகவலைத்தளங்களில் வீடியோ மற்றும் காவல்துறை சார்பில் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை தொடரும் என்றும்,கலவரம் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளதாகவும்,சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு மாவட்ட காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் கூறினார்.



மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு பள்ளிக்கு தீ? வெளியான அதிர்ச்சி தகவல்!



தனியார் பள்ளி மாணவர்கள்,பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை  சார்பில் பள்ளிகளிலும்,பெற்றோர்களிடமும் நேரில் சென்று விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர் - நெல்லையில் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ