சென்னை: தமிழக சட்டப் பேரவை பொது நிதிநிலை அறிக்கை கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (M. R. K. Panneerselvam) தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெறுகிறது.  


சட்டப்பேரவையில் தனது முதல் பேச்சை தொடங்கிய வானதி ஸ்ரீனிவாசன்:
“வனவிலங்குகளால்  பயிர் சேதம் அடைகிறது. மனித உயிர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. பயிர்களை பாதுகாக்க வேளாண் பட்ஜெட்டிலில் திட்டம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப் பட்டது” என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். 


இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “பயிர்களை பாதுகாப்பதில் வன விலங்குகளான யானைகள், எருமைகளால் பிரச்சினைகள் இருக்கிறது.  நிச்சயமாக அதற்கான திட்டத்தை அரசு  வகுக்கும்” என்று உறுதி கூறினார்.  


வனவிலங்குகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகள் வசிக்கும் பகுதியில்  நில ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அந்த நில ஆக்கிரமிப்புகளை அகற்றி வனவிலங்குகள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் பயிர்களை பாதுகாக்க முடியும்” எனத் தெரிவித்தார்.


ALSO READ | 'கன்னிப்பேச்சை' 'அறிமுகப்பேச்சாக' மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் கோரிக்கை


அதன்பின், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய வானதி சீனிவாசன், மத்திய அரசு என்பற்கு பதிலாக சமீபகாலமாக ஒன்றிய அரசு என்று அழைப்பதை பார்க்கிறோம். 19 ம் நூற்றாண்டு பெண் கவி ஒருவர் எழுதிய கவிதையில் Rose is a Rose is a Rose என்ற வரிகள் இருக்கும்.  அதுபோல எப்படி அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கவும் முடியாது, குறைக்கவும் முடியாது என்று கூறினார். 


இந்த கேள்விக்கும் விளக்கமளித்த பழனிவேல் தியாகராஜன், Rose is a Rose is a Rose என்பது ரோஸ் தான். அது மல்லிகை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் மாநிலங்களுக்கான உரிமை பற்றிய பேசியதில் முன்னோடி மோடி தான். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைக்கு குரல் கொடுத்தவர். முதன்முறையாக ஜிஎஸ்டி மாநில அரசின் உரிமைகளை பறித்து கொள்ளும் என்றும் கூட அவர் தெரிவித்தார்.


ஆகையால், ஆங்கிலத்தில் Where I Stand Depends on where I Sit ஒரு பழமொழி உள்ளது. அதாவது நாம் எங்கு இருக்கிறேமோ அதற்கு ஏற்றது போல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது என்று பொருள். இது பொதுவாக அரசியல்வாதிகளுக்கு பொருந்தும் என்றும் கூறுவார்கள். ஆனால் திமுகவை பொறுத்தவரை எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எங்கள் நிலைப்பாடு எப்போதும் ஒன்று தான் என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


ALSO READ | TASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR