தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் பலர் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்துசெல்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மதுபாட்டில்கள்: வைரலாகும் வீடியோ


இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக லிப்ட் செயல்படாமல் இருந்துள்ளது. ஆறு அடுக்குமாடி கட்டிடம் கொண்ட இந்த அரசு மருத்துவமனையில் பெரும்பாலான நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் லிப்ட் வசதியையே நம்பி உள்ள நிலையில், 2 மாதங்களுக்கும் மேலாக லிப்ட் வேலை செய்யாமல் கிடந்துள்ளது. அதிகாரிகள் யாரும் இதைக் கவனத்தில் கொள்ளாததால், இரண்டு மாதங்களாக நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் 6 மாடியையும் ஏறி, இறங்கி அவதியடைந்து வருகின்றனர். 


ஒவ்வொரு முறையும் மாடிப்படிகளுக்கு படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி வருவது மிகுந்த சிரமமாக இருப்பதாகவும் நோயாளிகள் உறவினர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகளும் உறவினர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இதுமட்டுமல்லாமல், மேலும் சில இடங்களில் லைட் வசதியும், மின் விசிறி வசதியும் செய்து தருமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | கண் கலங்க வைக்கும் காட்சி: ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை - மகன் உடலை 90 கி.மீ. சுமந்து சென்ற தந்தை!


லிப்ட் வசதி இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சைப் பிரிவுக்காக வரும் நோயாளிகளை ஸ்டெச்சரில் வைத்து இரண்டாவது, மூன்றாவது முதல் ஆறாவது மாடி வரை தள்ளிக்கொண்டு மாடியில் ஏற வேண்டியிருக்கிறது. விரைவில் சிகிச்சை அளிக்க முடியாத யதார்த்த பிரச்சனை வேறு இருக்கிறது. லிப்ட் வசதி இருந்தால் படுகாயங்களுடன் வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது. எனவே, பல சிக்கல்கள் இருப்பதால் கூடிய விரைவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை லிப்ட் வசதியை சரிசெய்து தருமாறு பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR