கண் கலங்க வைக்கும் காட்சி: ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை - மகன் உடலை 90 கி.மீ. சுமந்து சென்ற தந்தை!

ஆந்திராவில் ஆம்புலன்ஸ்கு பணம் இல்லாததால் உயிரிழந்த மகனின் உடலை இருசக்கர வாகனத்தில் 90 கி.மீ தூரம் கொண்டு சென்ற காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது. 

Written by - Arunachalam Parthiban | Last Updated : Apr 26, 2022, 08:35 PM IST
  • இறந்த மகனின் உடலை கொண்டு செல்ல அதிக பணம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
  • பணம் இல்லாததால் மகன் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற தந்தை
  • காண்போர் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி
கண் கலங்க வைக்கும் காட்சி: ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை - மகன் உடலை 90 கி.மீ. சுமந்து சென்ற தந்தை! title=

ஆந்திரப்பிரதேச மாநிலம், ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது 10 வயது மகன் ஜெசேவா சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான பெத்வேல் கிராமத்திற்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸின் உதவியை நாடினார் தந்தை நரசிம்மலு. 

ஆனால் சிறுவனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே வறுமையின் பிடியில் சிக்கியிருந்ததாலும், கையில் இருந்த பணம் எல்லாம் சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்டுவிட்டதாலும் நரசிம்மலுவிடம் ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் மகனின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்ல முடிவெடுத்தார். 

AP

இதைத்தொடர்ந்து உறவுக்கார இளைஞர் ஒருவரை இருசக்கர வாகனம் எடுத்து வரும்படி கூறிய அவர் தனது ஆசை மகனின் உடலை மார்பில் சாய்த்தபடி 90 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சொந்த ஊர் சென்றடைந்தார். இந்த சம்பவத்தை மருத்துவமனையில் இருந்த ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் காண்போர் நெஞ்சங்களை இந்த காட்சி உலுக்கியது. 

மேலும் படிக்க | இறந்த மகளின் உடலை, வீடுவரை தோலில் சுமந்து சென்ற தந்தை!

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

 

''திருப்பதி RUIA மருத்துவமனையில் உயிரிழந்த அப்பாவி சிறுவன் ஜெசவாவை நினைத்து என் இதயம் கணக்கிறது. அவரது தந்தை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கெஞ்சினார் . ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. அமரர் ஊர்தியும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடலை கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிக பணம் கேட்டுள்ளார். இதனால் வறுமையில் வாடிய அந்த தந்தைக்கு 90 கிலோமீட்டர் தூரம் தனது மகனின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இடிந்துநொறுங்கியுள்ள சுகாதார கட்டமைப்பை பிரதிபலிப்பு தான் இதயத்தை உலுக்கும் இந்த சோக சம்பவம்.'' இவ்வாறு சந்திர பாபு நாயுடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அதிர்ச்சியூட்டும் வீடியோ: முதியவர் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்ஐ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src="https://zeenews.india.com/tamil/live-tv/embed" width="100%">

Trending News