புது டெல்லி: கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட்  (George Floyd) என்ற  இளைஞர்  அமெரிக்க காவலர் ஒருவரால்  அநியாயமாக கொல்லப்பட்டார். இது நம்மில் பலரும் அறிந்ததுதான். அவரது மரணத்திற்கு அவரது நிறம் ஒரு காரணம் என்பது எவ்வளவு கொடூரமான விஷயம்?  அறிவியலில் முன்னேறிய நாடு, அறிவில் முன்னேறிய  நாடு  எனப் போற்றப்படும், அந்த நாட்டில் இப்படிப்பட்ட எண்ணங்கள் இருப்பது வெட்க கேடான விஷயம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்ஜ் பிளாய்ட்  போலி ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு என்ன தண்டனையோ அதுதான் அவருக்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.  இது போன்று கறுப்பினத்தவர் அநியாயமாக கொல்லப் படுவது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட  நூறு ஆண்டுகளாக அமெரிக்காவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளாக அது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக  நடந்துக்கொண்டு இருக்கிறது.



எனவேதான் இந்த இனவெறியை பொறுக்க முடியாமல் போராட்டங்கள் வெடித்தன, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அந்த போராட்டத்தில் கறுப்பினத்தவர் மட்டுமல்லால், பல அமெரிக்கர்களும் கூட  கலந்து கொண்டனர். தன் நாடு எப்படி எல்லாம்  இருக்க வேண்டும் என்ற நியாயமான கனவு அந்நாட்டின் ஒவ்வொரு  பிரஜைக்கும் இருக்கும்.  அதிலிருந்து சிலர் மாறுபட்டு நடக்கும்போது அதற்கு எதிர்ப்பு  எழுவது இயல்புதானே?


இதையும் படிக்கவும் | Video: Justin Bieber-யை தோற்கடித்த கொரியன் BTS இசைக்குழு!


இதையும் படிக்கவும் | “நான் இனவெறியர்களை வெறுக்கிறேன்”; பிரபல ஹாலிவுட் நடிகர் கருத்து!


இது ஒரு புறம் இருக்க இதே ஜார்ஜ் பிளாய்ட்  கொலையை எதிர்க்கும் போராட்டங்களில் அமெரிக்க வாழ் தமிழ் மக்களும்  பங்கேற்றுள்ளனர்.  அதிலும் தமிழகத்தின் மிக பழமையான இசைக் கருவியான பறை கருவியை வாசித்துக் கொண்டு அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.



எங்கு அநீதி நடந்தாலும் அங்கு முதலில் ஒலிக்கும் குரல் தமிழனின் குரலாக இருக்கும். ஆம் கலாசாரம் நிறைந்த, அறிவார்ந்த சமூகம் அப்படிதான் இருக்கும். அப்படிதான் இருக்க வேண்டும். ஆனால்  இப்போது தமிழ் நாட்டில்  சமீப  நாட்களாக  சில விஷயங்கள் நடைபெறுகின்றன.  அதுவும் ஒரு விதமாக நிற பாகுபாட்டை  வலியுறுத்தும் ஒரு செயலாகவும், தோற்றத்தை வைத்து பகடி பேசும் ஒரு  குணமாகவும் வெளிப்பட்டுக்  கொண்டிருக்கிறது. ஜல்லிக் கட்டுக்காக போராடிய நம் தமிழ் இளைஞர்களா  இப்படி என்று எண்ணத் தோன்றுகிறது.


அதாவது கொரிய நாட்டை  சேர்ந்த  BTS என்ற இசைக்குழுவினரை கேலி செய்து தமிழ் சமூக ஊடகங்களில் அவ்வளவு பதிவுகள், மீம்ஸ்கள், கருத்துக்கள் எல்லாம் வெகு வேகமாக பகிரப்பட்டு பதியப்பட்டு வருகின்றன. இந்த கேலி கிண்டல்களை பற்றி  பேசும் முன்பாக BTSஇசைக்குழு பற்றி ஒரு  சிறிய அறிமுகத்தை பார்த்து விடுவோம். 


இதையும் படிக்கவும் | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் முதல் பரிசு


7 இளைஞர்கள் கொண்ட  ஒரு தென் கொரிய  இசைக்  குழு. 2013 ஆம் ஆண்டிலிருந்து இவர்களின்  இசைக்குழு இயங்கி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை தரும் பாடல்கள்,  நுணுக்கமான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் பாடல்கள் என்று  இளைஞர்கள் மனதை தொடும் பாடல்களை பாடி அசத்தி வருகிறார்கள். அவை அனைத்தும்  யூ ட்யூபில் (YouTube)வெளியிட்ட ஒரு நாளிலேயே பல லட்சம் பார்வைகள், ஓரிரு நாட்களில் கோடிக்  கணக்கில் பார்வைகள், லைக்குகள் என்று கிடைக்கும் அளவுக்கு,  மிகவும் உச்சத்தில் இருக்கும் ஒரு பிரபலமான இசைக்குழு. 



இவர்களின்  இசை நிகழ்ச்சியால், தென் கொரிய  நாட்டின் ஜிடிபியே  (GDP)மேலேறும்.  அப்படி ஒரு சாதனை பாதையில் இருக்கும் இளைஞர் பட்டாளம். இவர்கள்  இருக்கும் முதல் இடத்தின்  உயரத்தை சரியாக கூற வேண்டுமானால் இவர்களுக்கு  அடுத்தாக பிரபலமாக இருக்கும்  இசைக் குழுவுக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கைக்கும்  இவர்களுக்கு இருக்கும்  ரசிகர் எண்ணிக்கைக்கும் இடையே  பெரும் எண்ணிக்கை வித்தியாசம் இருக்கும்.  


அப்படிப்பட்ட ஒரு உயரத்தை அடைய அவர்களின் திறமை,  உழைப்பு, ஒற்றுமை, ஈடுபாடு, எல்லாம்தான் அடித்தளமாக இருந்துள்ளது.  ரசிகர்கள் என்பவர்களோ, பின் தொடர்பவர்கள் என்பவர்களோ  நிறைய கிடைப்பது  அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அபரிதமான  திறமை , நல்ல சாராம்சம் உள்ள படைப்புகள் இவற்றிற்கே இப்படி ஒரு  பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும்.  இப்படி  திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்த ஒரு குழுவினரின் தோற்றத்தை வைத்துதான் தமிழக சமூக ஊடகங்ககளில் தாறுமாறான கருத்துப் பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன.


இதையும் படிக்கவும் | உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!


இதையும் படிக்கவும் | ஜல்லிக்கட்டுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்வோம் :சசிகலா


அந்த இசைக்குழு இளைஞர்களின்  தோற்றம்  குறித்து கேலி செய்கிறார்கள். பெண்களை போல இருக்கிறார்கள் என்று இழிவு படுத்துகிறார்கள்.  அது முற்றிலும் தவறான கண்ணோட்டம். ஒரு வளர்ந்த தமிழ் சமூகம், கலாசார செறிவு கொண்ட ஒரு மக்கள் இனம் இப்படி பதிவிடுவது  உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.


இதே போல கொல்கத்தாவில் ஆரம்ப பள்ளி பாடப்புத்தகத்தில் ugly என்ற சொல்லுக்கு அருகே ஒரு ஆப்பிரிக்க இளைஞனின்  புகைப்படம்  அச்சிடபட்டுள்ளது. அதுவும் அங்குள்ள சிந்தனையாளர்களால் இப்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


தோற்றம், இனம், மொழி, மதம், நிறம் இவற்றை வைத்து  ஒருவரை எடை போடுவதையோ , விமர்சிப்பதையோ ஒரு ஆரோக்கியமான சமூகம்  செய்யாது. அதிலும் உலகிலேயே பழம் பெரும் நாகரிகத்தை கொண்ட தமிழ் நாட்டில் இது நடக்க கூடாது. ஜார்ஜ் பிளாய்ட்  கறுப்பினத்தவர் என்பதற்காக கொலை செய்யப்பட்டது ஒரு அநீதி என்றால், கொரிய இளைஞர்கள் தனித்துவமான வெண்மையான தோற்றத்துடன் இருப்பதற்காக  கிண்டல் செய்யப்படுவதும் அநீதிதான்.  Ugly என்ற சொல்லுக்கு ஆப்பிரிக்க இளைஞனின்  புகைப்படம் அச்சிடப்பட்டதும் அநீதியான செயல்தான்.


உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.


“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.”