“நான் இனவெறியர்களை வெறுக்கிறேன்” என்று ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் குறித்து கருத்து தெரிவிக்கிறார் 'ஸ்டார் வார்ஸ்' நடிகர் ஜான் பாயெகா
இது போன்ற சம்பவங்கள் உலகை உலுக்கியது முதல் முறை அல்ல, ஆனால் ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் பழைய காயங்களை நினைவுபடுத்துகிறது. “நான் இனவெறியர்களை வெறுக்கிறேன்” என ‘ஸ்டார் வார்ஸ்’ நடிகர் ஜான் பாயெகா ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் குறித்து பேசியதும், ட்வீட் செய்ததும் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
ஆஃப்ரிக்க அமெரிக்கர் ஒருவரை தரையில் தள்ளி, அவரது கழுத்தில் தனது முட்டியை வைத்து அழுத்தும் அந்த அதிகாரியை அனைவரும் திட்டினார்கள்.
I really fucking hate racists.
— John Boyega (@JohnBoyega) May 27, 2020
"இந்த்த் தீ எப்போதும் எரிகிறது. ஒருபோதும் முடிவுக்கு வராத முடிவிலியாகத் தோன்றுகிறது. கொலைகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழக்கும் தருணத்தில் கூட இந்த மனிதனிடம் இரக்கம் காட்டப்படவில்லை " என்று நடிகர் ஜான் பாயெகா தனது வருத்தத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார்.
அவரது மரணம் ஒரு "தொழில்முறை சேவைகள் கொடுக்கப்படாததன் விளைவு என்று காவல்துறையினர் பிறகு தெரிவித்தனர்.
தனது கருத்தினால், எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தினாலும் அது குறித்து கவலைப்போடவில்லை என்ரு தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ஒரு வீடியோவில் கூறும் அவர், " முதலில். ஒரு கருப்பு மனிதன் தெருக்களில் இனவெறிக்கு பலியானான். மூச்சுவிட முடியவில்லை என்று சொன்னதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து அவரது கழுத்தை அழுத்தியிருக்கிறார்கள். நான் அந்த தெருவில் வசிக்கவில்லை என்றாலும், நானும் கருப்பினத்தைச் சேர்ந்தவன். நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் இனவெறி பிடித்த வெள்ளையினத்தினர் " என்று சீறுகிறார்.
"உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் நான் அப்படி தான் சொல்வேன்..., இன்னும் கடுமையாகச் சொல்வேன்--- உண்மையில் இது வாழ்வைப் பற்றியதோ, பணத்தைப் பற்றியதோ அல்ல. அவை அனைத்தும் என் கனவின் ஒரு பகுதி, வேலையின் ஒரு பகுதி. நீங்கள் மக்களை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று அவர் குமுறுகிறார்.
ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தில் தொடர்புடைய நான்கு போலீஸ் அதிகாரிகள் மினியாபோலிஸ் காவல் துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜார்ஜ்ஜை கைது செய்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் குறித்த விசாரணையை தற்போது FBI மேற்கொண்டுள்ளது.