ஜல்லிக்கட்டுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என சசிகலா நடராஜன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அணைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது - சின்னம்மா
— AIADMK (@AIADMKOfficial) January 18, 2017
ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்-சின்னம்மா வலியுறுத்தல்.
— AIADMK (@AIADMKOfficial) January 18, 2017
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கக்கோரும் தீர்மானம், அணைத்துக்கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றுவோம் - சின்னம்மா அறிவிப்பு
— AIADMK (@AIADMKOfficial) January 18, 2017