மதுரை: தமிழர் திருநாளான பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு (Jallikattu) போட்டிகள், இந்த இந்த ஆண்டும் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 17 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை 7.30 மணிக்கே போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும் வாடிவாசல் திறக்கப்பட்டது. சீறி வரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் காத்திருந்தனர்.
700 க்கும் மேற்பட்ட காளைகளும், 900 க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர். மாடுபிடி வீரர்கள் குழு குழுவாக களம் இறக்கப்பட்டனர். குழுவுக்கு 75 பேர் வீதம் வீரர்கள் என்ற விகிதத்தில் களம் இறங்கினார்கள்.
காளைகளை அடக்குவதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, உடனே பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித்குமாருக்கு கார் மற்றும் நான்கு பசு மாடுகளை பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற ராம்குமாரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 14 காளைகளை அடக்கி இரண்டாவது இடம் பிடித்த கார்த்திக்கிற்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கி மூன்றாவது இடம் பிடித்த கணேசனுக்கு பத்து ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.