`இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தை முதலில் சீரமைத்தது நான்தான்`: ராமதாஸ் பெருமிதம்
இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை 30 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது அவர்தான் என்றும், அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள் என்றும் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65ஆவது நினைவு தினம் நாளை (செப். 11) அனுசரிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் நாளை மரியாதை செலுத்த உள்ளனர். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தருவார்கள். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பபு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார். அதில்,"தேவேந்திரர்களின் உரிமைகளுக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி இமானுவேல் சேகரனாரின் 65ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது தியாகத்தையும், போர்க்குணத்தையும் போற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்: நீதிபதிகள்
தொடர்ந்து, தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை 30 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த அவர்தான் என்றும், அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள் என்றும் பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.
மேலும், இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாகவும், வரும் அக்டோபர் 9ஆம் தேதி, அவரது 98ஆவது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, அடுத்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்குகிறது எனவும் அன்று முதல் ஓராண்டுக்கு அதைக் கொண்டாடவும், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில், நேற்று நள்ளிரவு (செப்.9) முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, அடுத்த மாதம் அக்.30ஆம் தேதி, பசும்பொன் முத்துராமலிங்கனாரின் குருபூஜை விழா வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அக்.31ஆம் தேதிக்கு பின் தடை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக போராடிய இம்மானுவேல் சேகரன், 1957ஆம் ஆண்டு செப்.11ஆம் தேதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ