பெரியார், அண்ணா சிலைகளுக்கு காவிதுணி போர்த்திய மர்ம நபர்கள்
நாமக்கல்லில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவிதுணி போர்த்தி மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் நகரில் பிரதான சாலையில் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெரு சந்திப்பில், ஒரே பீடத்தில் தந்தை பெரியார் (1984-ம் ஆண்டு), அறிஞர் அண்ணா (1994-ம் ஆண்டு) மற்றும் எம்.ஜி.ஆர். (1993-ம் ஆண்டு) சிலைகள் மார்பளவில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மூன்று சிலைகளும் அதிமுக-வால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் சிலை விவகாரம்: H. ராஜா மீது வழக்கு பதிவு!
இந்த மூன்று சிலைகளுக்கும் காவி நிற துணியால் பொன்னாடை போர்த்தி மலர் மாலையும் அணிவித்துள்ளனர். இச்சம்வபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல்துறையினர் சிலைகள் மீது போர்த்தப்பட்ட காவி துணி மற்றும் மாலைகளை அகற்றினர்.
மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான நபர்கள் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிட கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
H. ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்!
எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தமிழகம முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வந்தது.
இந்நிலையில், எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.