காட்டுமிராண்டித்தனமாக கருத்து கூறிய H. ராஜா: ரஜினி கண்டனம்!

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று H. ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Updated: Mar 8, 2018, 10:12 AM IST
காட்டுமிராண்டித்தனமாக கருத்து கூறிய H. ராஜா: ரஜினி கண்டனம்!

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று H. ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று H. ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று H. ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனம் என்றார்.

இதற்காக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும், பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஏற்கனவே தெரிவித்திருந்தத்து குறிபிடத்தக்கது.