தமிழகத்தில் 1,588 கோடி ரூபாய் செலவில் ஆலை அமைக்கும் சாம்சங் நிறுவனம்!
ஸ்ரீபெரும்புதூரில் 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான புதிய கம்ப்ரசர் ஆலையை அமைப்பதை சாம்சங் இன்று உறுதிபடுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகவும் நம்பகத்தன்மையுடனான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங் நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் புதிய கம்ப்ரசர் உற்பத்தி ஆலையை அமைக்க 1,588 கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டும் இந்த ஆலையில் ஆண்டுக்கு 8 மில்லியன் கம்ப்ரசர் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், இனிவரும் காலங்களில் இது விரிவுபடுத்தப்படும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் நிறுவனமானது ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கம்பரஸர்களை, குளிர்சாதனப் பெட்டிகளில் பொருத்தி அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை!
இன்று இந்நிறுவனம் புதிய ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் (எம்ஓயு) தமிழ்நாடு அரசுடன் இணைந்து கையெழுத்திட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். மேலும், இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆனந்த், சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி கென் காங் மற்றும் சாம்சங் சென்னை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் பியோங்ஜின் காங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் ஆலை அமைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீடுகளை அதிகப்படுத்துதல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் சாம்சங் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இந்த புதிய முதலீடு, மாநிலத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்று கூறினார். மேலும் இதுகுறித்து கென் காங் பேசுகையில், “இந்தப் புதிய திட்டத்திற்கு 1,588 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். இதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்த நாங்கள் உதவுவோம். சாம்சங்கின் இந்த புதுமையான முயற்சி வளர்ந்துவரும் நாட்டின் டிஜிட்டல் தேவையை பூர்த்தி செய்வதற்கும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று கூறியுள்ளார்.
2007-ல் ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்ட ஆலையில் க்யூஎல்இடி டிவிகள், லைஃப்ஸ்டைல் டிவி தி ஃபிரேம், புதுமையான கர்ட் மேஸ்ட்ரோ ரெஃப்ரிஜிரேட்டர்கள், ஏஐ எகோபபுள் வாஷிங் மெஷின்கள் மற்றும் விண்ட்ஃப்ரீ ஏசி உள்ளிட்ட சாம்சங்கின் முதன்மை எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் இந்த ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நொய்டா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் ஐந்து ஆர் & டி மையங்கள் மற்றும் ஒரு வடிவமைப்பு மையத்துடன் முண்ணனி வகிக்கிறது. இவை 200,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவைகளையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | இந்த மாவட்டத்தில்தான் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் - ரிப்போர்ட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR