கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் (pneumonia) அதிகமாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை (Victoria Hospital) நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா (Sasikala) கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜனவரி 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார் சசிகலா.


இந்நிலையில், நேற்று முன்தினம் சசிகலாவுக்கு சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா உறுதி (Covid-19) செய்யப்படவில்லை. இதனையடுத்து, அவரை விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று CT ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அதில், சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை தனியாக கொரோனா வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


ALSO READ | அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!



இந்த சூழ்நிலையில், இன்று காலையில் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் அளவு 95 இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR