அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓ.பன்னீர்செல்வத்தின் (O Panneerselvam) மனைவி விஜயலட்சுமி கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். ஓ.பன்னீர்செல்வம் மனைவி இறந்த தகவல் அறிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.


ALSO READ | ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவு: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இரங்கல்


இதற்கிடையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த விஜயலட்சுமி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்ப இருந்தார். ஆனால் திடீரென்று இன்று அதிகாலை ஐந்து மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் இருந்த இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் விஜயலெட்சுமிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜயலட்சுமி உயிரிழந்தார்.


இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள விஜயலட்சுமி உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டார். அரசியல் ரீதியாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நேரில் வந்து சசிகலா ஆறுதல் கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.


ஓபிஎஸ் மனைவியின் உடல் தலைவர்கள் அஞ்சலிக்குப்பின் நேரடியாக சொந்த ஊரான தேனி பெரியகுளத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. பெரிய குளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓட்டக்கார தேவர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இறுதிச்சடங்குகள் பெரியகுளத்தில் நடைபெறும். 


ALSO READ | ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் காலமானார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR