அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த விஜயலட்சுமி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்ப இருந்தார். ஆனால் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் இருந்த இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
ஓ பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy)ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். இது தவிர பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காலையிலிருந்தே மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ALSO READ: ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் காலமானார்
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் (SarathKumar) ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் : "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அன்புச் சகோதரருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியும், பாராளுமன்ற உறுப்பினர் திரு.P.ரவீந்திரநாத்குமார் அவர்களின் தாயாருமான திருமதி. விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
மனைவியின் பிரிவால் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் திரு.ஓ.பன்னீர்செல்வம் (O Paneerselvam) அவர்களுக்கும், தாயின் பிரிவால் தீராத வேதனையில் ஆழ்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அதிமுக இயக்க தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR