கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் (ஜனவரி 19) முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் (Schools Reopen) என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்லும் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (Vijayabaskar) தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் 18 லட்சம் மாணவர்கள் 10 மாதங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு இன்று பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர். 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


ALSO READ இன்று முதல் பள்ளிகள் திறப்பு! இந்த முக்கிய 10 விதிகளை அறிந்து கொள்ளுங்கள்


இதற்கிடையே பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், முன் ஏற்பாடுகள் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகின. அந்த வழிமுறைகளை பின்பற்றும் விதமாக அந்தந்த பள்ளிகள் சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


தமிழகத்தில் (Tamil Nadu) இன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முதல் 2 நாட்கள் வகுப்புகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதுவது தொடர்பான ஆலோசனைகளும், அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.


10, 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் அரசு பரிசீலனை மேற்கொண்டு, 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு பாடங்களை குறைத்துள்ளது. அதன் விவரங்களையும் சமீபத்தில் கல்வித்துறை வெளியிட்டது.


ALSO READ | School Re-opening in India: உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயாரா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR