School Re-opening in India: உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயாரா?

கொரோனா காலத்தில் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை (Health of Children) விட கல்வி முக்கியமா என்று ஒரு தயக்கமும், பயமும் இருக்கிறது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Sep 19, 2020, 10:48 PM IST
School Re-opening in India: உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயாரா?
Photo: Reuters

Chennai, Tamil Nadu: கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் 2020 மார்ச் முதல் மூடப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் ஆன்லைன் (Online Class) வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இப்போது அன்லாக் 4-ம் (Unlock-4) காலக் கட்டத்தில் 2020 செப்டம்பர் 21 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகளை (School Reopening) திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இப்போது இந்த நேரத்தில் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை விட பள்ளிக்கு அனுப்புவது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசு விதி என்ன சொல்கிறது? 
பள்ளி வளாகத்தில் முகக்கவசம் (Face Mask) அணிவது கட்டாயமாக இருக்கும் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி கைகளை (Hands Wash) கழுவ வேண்டியிருக்கும் என்றும், அதேநேரத்தில் குறைந்தது ஆறு அடி அளவிற்கு சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ | Sep 21 முதல் எங்கெல்லாம் SCHOOL திறக்கும் மற்றும் திறக்காது? முழு விவரம் உள்ளே!

பெற்றோர் என்ன நினைக்கிறார்கள்
இந்த நேரத்தில், ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை (Health of Children) விட கல்வி முக்கியமா என்று ஒரு தயக்கமும், பயமும் இருக்கிறது. இந்த சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் குரலை உயர்த்தி உள்ளனர்.

முகமூடி அணிந்திருந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு!
சில பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் வெளியே செல்லும் போது சமூக தூரத்தை (Social Distancing) கடைபிடிக்க வேண்டும், அதேநேரத்தில் முகக்கவசம் (Wearing Mask) அணிய வேண்டும் என தினமும் அறிவுறுத்தப்படுகின்றன. ஆனால் முகமூடி அணிவதால் அவர்களுக்கு சிறிது நேரம் கழித்து மூச்சு (Breathing Trouble) விடுவதில் சிக்கல் ஏற்பட ஆரம்பிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் முகமூடியை அணிந்துக்கொண்டு எப்படி நாள் முழுவதும் படிக்க முடியும் என பல பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ALSO READ |  பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

குழந்தைகள் கவனித்துக்கொள்வதில் அச்சம்: 
குழந்தைகள் எவ்வளவு குறும்புக்காரர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெற்றோரின் மிரட்டல் மற்றும் அன்புக்கு பயந்து வீட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் பள்ளிக்குச் செல்வதன் மூலம் அவர்கள் விதிகளைப் பின்பற்றுவார்களா என அச்சம் ஏற்படுகிறது. பள்ளியில் உள்ள குழந்தைகள் தங்கள் நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்ற அவசரத்திலும், மகிழ்ச்சியிலும் விதிகளை கடைபிடிப்பார்களா? என்று பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்.

ALSO READ |  குழந்தைகளின் நலன் தான் முக்கியம்!! தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை

தடுப்பூசி வரும் வரை காத்திருங்கள்!
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி (Corona Vaccine) வரும் வரை தங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பல பெற்றோர்கள் உள்ளனர். இந்த நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது ஆபத்தானது என்றும், தடுப்பூசி வரும் வரை அவர்கள் (மத்திய, மாநில அரசுகள்) காத்திருக்க வேண்டும் என்றும் பொற்றோர்கள் விரும்புகிறார்கள் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR