தொடர் மின்வெட்டு - சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி விளக்கம்
நேற்றைய முன் தினம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றைய முன்தினம் (19.04.2022) கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். அதேசமயம், மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் வராததால்தான் மின்வெட்டு ஏற்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மின்வெட்டு தொடர்பாக அதிமுக சார்பில் இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.]
அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “கடந்த ஓராண்டில் ஒரு டன் நிலக்கரிகூட இறக்குமதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் ஒருநாள் மின்உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே அளித்தது.
மேலும் படிக்க | அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: விஜயகாந்த் வேதனை
தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது.குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் போதுமான நிலக்கரி இல்லாதபோதும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது” என பேசினார்.
மேலும் படிக்க | 3 உயிர்கள் பலியாக அரசின் அலட்சியமே காரணம்: கொதித்தெழுந்த சீமான்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR