காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புழல் சிறைக்கு மாற்றம்:


தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பணியில் இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு காவேரி மருத்துவமனியில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, இவரை அந்த மருத்துவமனையில் இருந்து புழல் ஜெயிலுக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் - மின்வாரியம் உத்தரவு


கைது-நெஞ்சுவலி-மருத்துவமனையில் அனுமதி..!


தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திலும் அவருக்கு தொடர்புடை இடங்களிலும் அமலாக்கத்துறையினர் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். கரூரில் தொடங்கிய இந்த சோதனை, சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் முடிவு பெற்றது. இந்த சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு இருதய பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்யப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் இருந்து வந்தார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதால், அவர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மாறுபட்ட தீர்ப்பு..!


அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி, தன் கணவரை சட்ட விரோதமாக அமலாக்கத்துறையினர் கைது செய்ததாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருவரும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து இவ்வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார். இவர், ”இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். 


கைதி எண் வழங்கல்:


சில நாட்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜியின் காவல் பொறுப்பை சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.  சிறையில் அடைக்கப்பட இருக்கும் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிகளுக்கு வழங்கப்படம் எண் கொடுக்கப்பட்டது. சிறை கைதிகளுக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டது. அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டினை சுற்றி பாதுகாப்புக்காக ஏராளமான ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் அமைக்கப்பட்டனர். செந்தில் பாலாஜியை பார்க்க வரும் பார்வையாளர்கள் புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் கைது எண்: 001440 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பின்னோக்கி செல்கிறது தமிழ்நாடு; ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ