கரூரில் 12 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில் 9 இடங்களில் சோதனை முடிந்த நிலையில் 3 இடங்களில் இரவிலும் தொடரும் சோதனை நடந்தது. எம் சி சங்கர் ஆனந்த் இடம் 10 மணி நேரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் கிடக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர் நாளையும் தொடரும் என தகவல். வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 9 மணியளவில் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்ரமணி என்பவரது வீட்டில் சோதனையை தொடங்கினர். அடுத்தடுத்து பல்வேறு குழுக்களாக பிரிந்தும், ஒரு இடத்தில் முடித்த அதிகாரிகள் புதிதாக வேறு இடங்கள் என 12 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். இதில் கொங்கு மெஸ் உணவகம், 80 அடி சாலையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், செங்குந்த புரத்தில் உள்ள கணேஷ் முருகன் பஸ் டிரான்ஸ்போர்ட் அலுவலகம், சேலம் புறவழிச்சாலையில் உள்ள பாலவிநாயகா புளுமெட்டல் அலுவலகம், கோவை சாலையில் உள்ள குறிஞ்சி பைனான்ஸ் எனும் நிதி நிறுவனம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வருமான வரிச் சோதனையை இரவிலும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக 80 சாலை பகுதியில் அமைந்துள்ள எம் சி சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் 10 மணி நேரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் எம் சி சங்கர் கிடக்கும்படி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நாளை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மற்றும் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் க்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த ஊழல் தடுப்பு கண்காணிக்கு பிரிவு போலீசார் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர், இந்த விசாரணையின் பெயரில் இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் திருவாரூர் தலைமையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்கள் இன்பன், இனியன் மற்றும் அவரது உறவினர்கள் சந்திரகாசன் கிருஷ்ணமூர்த்தி நண்பர் உதயகுமார் ஆகியோர் 6 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 127 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் மேலும் இந்த வழக்கில் ஆதாரமாக 18,150 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | ஸ்டாலினிடம் இருந்து விலகியிருக்கும் துரைமுருகன் - அதிருப்திக்கு என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ