கொடைக்கானலில் இரண்டு காவலர்கள் மேல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் (Kodaikanal) மூஞ்சிக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரை சையது இப்ராஹிம் என்பவர் இடித்து தள்ளியதாக காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீசார் தகவல் கொடுத்துள்ளார். 


தகவல் அடிப்படையில் காவல் நிலையத்தில் (Police Station) பணிபுரியும் சின்னச்சாமி மற்றும் சீனி என்ற இரண்டு காவலர்கள் அன்னை தெரசா நகரில் வசிக்கும் சையது இப்ராஹிம் என்பவரை விசாரணை செய்ய சென்றுள்ளார்கள். விசாரணைக்கு ஒத்துழைக்காத சையது இப்ராஹிம் தான் வைத்திருந்த கத்தியால் இரண்டு காவலர்களையும் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான 2 காவலர்களும் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


ALSO READ:பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு! 


சையது இப்ராஹிம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் சம்பவத்திற்கு பின் தலைமறைவாகிய  சையது இப்ராஹிம் அவரது அம்மா தங்கை மூவரையும் இரவோடு இரவாக காட்டு சாலை காவல் தணிக்கைச் சாவடியில் காவல்துறையினர் (TN Police) கைது செய்தனர்.  


சையது இப்ராஹிம்மை மடக்கிப் பிடித்த காவலர்களை  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டி சன்மானங்களையும் அளித்தார்.




ALSO READ:ஜெய்பீம் விவகாரம் விலை பேச முற்படுவது வேதனை - நாசர் கவலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR