சென்னை வானகரத்தைச் சேர்ந்த 34 வயது பெண். கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கணவர் இறந்துவிட்டார். தனது இரு குழந்தைகளுடன் வாழக்கை நடத்தி வந்த பெண்ணின் தாயார், 2019 ஆம் ஆண்டு தனது மகள் படிக்கும் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கறபககனி என்பவர், விதவையான அந்த பெண்ணிடம் திருமணம செய்து கொள்வதாக கற்பககன்னி தெரிவித்துள்ளர். மேலும் தான் கார் ஓட்டுநராக இருப்பதாதால், தனக்கு வரதட்சணையாக சொந்தமாக ஒரு கார் வாங்கி தந்தால், திருமணம் செய்துக்கொலவதாகக் கூறியுள்ளார். அதனை நம்பி ஒரு காரை கற்பககன்னிக்கு  வரதட்சணையாக கொடுத்து, தனது இரு குழந்தைகளுடன் அந்த பெண் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ஓட்டுநர் கறபககனி, அவர்களுக்கு தொல்லையாக இருந்துள்ளார். தனது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதுக்குறித்து பேசிய, திருமணத்திற்கு பின் தனது இரண்டாவது கணவர் நடவடிக்கை சரியில்லாமல் இருந்தாகவும், பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததாக அந்த பெண் தெரிவித்தார். இந்த நிலையில் கற்பககன்னி வீட்டிற்கு வராமால் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தாக  தெரியவந்து. மேலும் அவர் (கற்பககனி) தனது 13 வயது பெண் குழந்தைக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை  கொடுத்ததையறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.  


ALSO READ |  Crime News: குடும்ப பிரச்சனையால் மருமகளை வெட்டி கொன்ற மாமனார்!


இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், கற்பககனி மீது  திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். கற்பக கனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும் கைது செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இதனை அடுத்து இரண்டாவது கணவர் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் புகார் அளித்தார்.


அதனைத் தொடர்ந்து தன் 13 வயது மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கற்பகக்கனி மீது நடவடிக்கை எடுக்காததால், குழந்தை நலகுழு எண்ணிற்கு பாதிக்கப்பட்ட சிறுமி புகாரளித்துள்ளார். அந்த சிறுமி குழந்தை நல குழு அதிகாரிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியாகி வைரலானது. இதனையடுத்து திருமங்கல அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தாம்பரத்தில் பதுங்கி இருந்த கற்பககனியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



ALSO READ |  காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்; பெண் தற்கொலை முயற்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR