கோவையில் கெட்டுப்போன சிக்கன் கறிகள் - அம்பலமாகும் ஹோட்டல் ரகசியங்கள்.!
கோவை உணவகங்களில் கண்டறியபட்ட கெட்டுப்போன சைவ, அசைவ உணவுகள் - அதிகாரிகள் அதிர்ச்சி…!
சமீப காலங்களில் ‘ஷவர்மா’ உணவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கோழி இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படும் சிக்கன் 'ஷவர்மா' சாப்பிட்ட கேரள சிறுமி உயிரிழந்தார். மேலும் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஷவர்மா தயாரிப்பதற்கு கெட்டுப்போன கோழிக்கறி பயன்படுத்தியது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக கேரளா மாநிலம் முழுவதும் சிக்கன் உணவு தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் படிக்க | ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை
இதேபோல், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஷவர்மா சாப்பிட்ட சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, உடல் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எட்டு குழுவாக பிரிந்து, மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை வ.உ.சி. பூங்காவை ஒட்டிய கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, சிக்கன் ஷவர்மா விற்பனை நடைபெறும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இரு கடைகளில் நடந்த ஆய்வில், கெட்டுப்போன கோழி இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அதேபோல, கெட்டுப்போன கிரேவி, கெட்டுப்போன பிரியாணியில் இருந்து சேகரிக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்து போன இடியாப்பம் ஆகியவையும் இந்த ஹோட்டல்களில் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க | சென்னையில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்?
உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பினர். மேலும் இது குறித்து கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஹோடல்களில் இதுமாதிரியான உணவுகளை உட்கொண்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR