மாநில கல்விக் கொள்கை: குழு அமைத்தது தமிழக அரசு!
ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி திரு முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது..
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கைக்காக கல்வியாளர்கள், வல்லுனர்கள் கொண்ட மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் ஏப்ரல் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், மாநில கல்வி கொள்கைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பல்வேறு மூத்த பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் மாநில கல்வி கொள்கையை வடிவமைத்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதற்கு அந்த சமயத்தில் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கொரோனா தொற்று இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதால் புதிய கல்வி கொள்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மற்ற மாநிலங்களை போலவே தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மாநில கல்வி அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு, குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு இதில் கலந்து கொள்ளவில்லை. புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவே இந்த மாநாடு நடைபெறுகிறது என்பதற்காக அமைச்சர்கள் இதனை புறக்கணித்து உள்ளதாக பள்ளிக்கல்வி துறையில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை வடிவமைக்கும் வகையில் அரசாணையையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
மேலும் படிக்க | மீண்டும் கொரோனா : தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அரசு கடிதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR