மீண்டும் கொரோனா : தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அரசு கடிதம்

கொரோனா பரவல் சென்னையிலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 1, 2022, 12:56 PM IST
  • ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழக தினசரி கொரோனா பாதிப்பு 22 ஆக இருந்தது
  • தமிழகத்தில் மட்டும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது
மீண்டும் கொரோனா : தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அரசு கடிதம் title=

கொரோனா பரவல் துவங்கி 3 வருடங்கள் ஆகிய நிலையில் இப்போதும் விட்டு ஒழியாமல் கொரோனா பரவல் மக்களிடையே இருந்து வருகிறது.

தினசரி லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தற்போது சற்று குறைந்து ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை தினசரி கூடிவரும் நிலையிலும், புதிய பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மட்டும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி 22 ஆக இருந்த தமிழக தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 100 ஐ தாண்டி இருப்பது சற்று கவனிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 32 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில்,

கொரோனா பரவல் என்பது சமூக பரவலாக மாறியதால் தினசரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதனை சமாளித்து வாழ பழகிக்கொள்ளவேண்டுமே தவிர, கொரோனா முற்றிலும் போய்விட்டது என்று எண்ண கூடாது. 

மக்கள் தன்னோழுக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். 

மேலும் மொத்த பரிசோதனையின் முடிவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில், குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். 

என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கமலின் ‘விக்ரம்’ எப்படி இருக்கிறது? - வெளியானது முதல் திரைவிமர்சனம்!- # Vikram Review

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News