Rajinikanth Latest Health Updates: நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விளைகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் உடல்நல காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இது வழக்கமான பரிசோதனை என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற ஒரு தகவலும் மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைதளப் பதிவில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.



மேலும் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது? அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? தற்போது அவரின் நிலை எப்படி இருக்கிறது? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க - நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதி!


மேலும் படிக்க - வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?


மேலும் படிக்க - ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ