12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிற வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முறை உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
சென்னை: தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு முக்கியமான செய்தியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டவுடன்தான், தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவு எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று (Coronavirus) பரவல் காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைகப்படுமே தவிர ரத்து செய்யப்படாது என ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிற வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முறை உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
ALSO READ: தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பாஸ்: தமிழக அரசு
இதற்குப் பிறகு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) கூறும்போது, சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளிவந்தவுடன், தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஜூன் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியிருந்த சிபிஎஸ்சி (CBSE) தற்போது இன்னும் ஓரிரு நாட்களில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடனும், கல்வி அமைச்சர்களுடனும் மத்திய கல்வி அமைசர் ரமேஷ் போக்ரியால் தனித்தனியாக மெய்நிகர் சந்திப்பை மெற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, மற்று வகுப்புகளுக்கான அன்லைன் வகுப்புகள் துவங்கும் முன்னர், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அரசு பள்ளிகளை மேம்படுத்துவது குறித்த விஷயங்களும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப் பட்டன. அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேமடுத்த தேவையான நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே கல்விக்கட்டணம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தையும் இன்னும் வலுப்படுத்த திட்டம் உள்ளதாகவும் தமிழக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
ALSO READ: தமிழக பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும்: அன்பில் மகேஷ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR