தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்விலும் மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
“எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்தவொரு மாணவனையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் (Tamil Nadu), அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவறுத்தப்படுகிறது.
ALSO READ: கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்
மேற்படி பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு முடிவடைந்த பிறகே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேர் பாதிப்பு, 478 பேர் உயிர் இழப்பு!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR