கொரோனா ஹாட் ஸபாட் ஆகிறதா தமிழக நட்சத்திர ஹோட்டல்கள்..!!!
சென்னை நகரத்தில் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அண்மையில் தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது கவலையை அளித்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் (8,00,429) குணம்டைந்ததாக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஆக்டிவ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 8,127 (பதிவான மொத்த தொற்று பாதிப்புகளில் 1%) ஆகும். இது இந்தியாவில் மிக மோசமாக பாதிப்புக்குள்ளான மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவாகும்.
இருப்பினும், சென்னை (Chennai) நகரத்தில் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அண்மையில் தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது கவலையை அளித்துள்ளது. இந்த நேரத்தில் அரசு, பொது முடக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட முழுவதுமாக பல தளர்வுகளை அறிவித்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பிற ஹோட்டல்களின் 4,392 ஊழியர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர், அவற்றில் 125 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 2014 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் 491 பேருக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை
நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களின் 2226 ஊழியர்களில் 1303 ஊழியர்களுக்கு COVID-19 பரிசோதனை நடத்தப்பட்டது. 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மற்ற வகை ஹோட்டல்களைப் பொறுத்தவரை. 4190 ஊழியர்ககளில், 1417 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 11 பேருக்கு தொற்று உறுதியானது.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடுத்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுகாதார செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருந்துகளுக்கான பெரிய அரங்குகள், திருமண அரங்குகள், விடுதிகள், கல்லூரிகள், வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விடுதிகள் போன்ற இடங்களில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சமீபத்தில், ஐ.ஐ.டி-மெட்ராஸ் வளாகத்தில் மற்றொரு ஹாட் ஸ்பாட் உருவானது. 700 க்கும் மேற்பட்ட நபர்கள், உணவு அருந்த ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதன் காரணமாக தொற்று பரவியதாக கூறப்பட்டது. ஐஐடி (IIT) வளாகத்தில் நடத்தபப்ட்ட சோதனைகளைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு, அறையில் உணவு சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டது
ஞாயிற்றுக் கிழமை, 867 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவற்றில் 236 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன. 10 பேர் இறந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 12,156 ஆக உள்ளது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாடு வந்த கிட்டத்தட்ட 2300 பேரில், 2,146 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 44 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது, மேலும் ஏழு நபர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
ALSO READ | COVAXIN: 50 லட்சம் தடுப்பூசியை வாங்க பாரத் பயோடெக்குடன் பிரேசில் ஒப்பந்தம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR