தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு: IMD
தமிழகத்தில் அடுதத் 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்கியதிலிருந்தே பல இடங்களில் கோடை மழையும் துவங்கியதால், வெயிலின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. கத்திரி வெயில் வழக்கம் போல் சுட்டெரித்தாலும், அவ்வப்போது பெய்து வரும் மழையினால், வெயிலின் தாக்கத்திலிருந்து அவ்வப்போது சிறிய நிவாரணம் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுதத் 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை (Rain) பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் பற்றி தெரிவித்த வானிலை ஆய்வு மையம், பிற மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறியுள்ளது.
ALSO READ: டவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல்
சென்னையை (Chennai) பொறுத்தவரை இன்றும் நாளையும் வெயிலிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும் என்றும் சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, டவ்-தே புயலின் தாக்கத்தால், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்தில் (Tamil Nadu) கன்னியாகுமரி உள்ளிட்ட சில கரையோர மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்று வீசியதில், பல வீடுகள் சேதமடைந்தன. பல ஊர்களுக்குள் கடல் நீர் புகுந்தது. டவ் தே புயல் குறித்து தமிழக முதல்வர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்தினார். நிலச்சரிவு போன்ற இயற்கை பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ALSO READ: அதி தீவிர புயலாகிறது டவ் தே, 5 நாட்களுக்கு கன மழை: எச்சரிக்கும் IMD
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR