தமிழக பட்ஜெட் குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை  முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.  பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்ற அவர், தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், இது மிகவும் சரியான நடவடிக்கை என பாராட்டியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இளைஞர்களை தயார் செய்ய  சிறப்புத் திட்டம், வட சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்றுள்ள அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான வேலை நாட்களை 150-ஆக உயர்த்துவது குறித்த அறிவிப்பு இடம் பெறாதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2022: வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு


கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள அவர், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மூவலூர் இராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல், தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்காக சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தமிழக பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக அரசு தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், இந்த பட்ஜெட் தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாத பகல் கனவு பட்ஜெட்டாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள்  உயர்கல்வி பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர் -ஆனால் இது பழைய ஆயிரம் ரூபாய் போல் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 


 



உரிமைத்தொகையில் திமுக மகளிரை ஏமாற்றி உள்ளதாகவும், திமுக மாறவில்லை - மக்கள் தான் மாற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி விமர்சித்துள்ளது. 


 



 


மேலும் படிக்க | TN Budget 2022: பிடிஆர் ஆங்கிலத்தில் பட்ஜெட் உரை வாசித்தது ஏன்?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR