நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், தென்சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளராக, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன், மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். 3 பேருமே மக்களுக்கு நன்கு அறிந்த முகங்கள் என்பதால், தென் சென்னை நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பாஜக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai Soundararajan) நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு, சென்னை ஈசிஆரில் உள்ள சாய் பாபா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். கையில் தாமரை பூவுடன் கோயிலில் வழிபட்ட அவர் காருக்குள் செல்லும் வரை தாமரை பூவை கையில் ஏந்தியபடி சென்றார்.


தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை நண்பகல் சுமார் 12 மணியளவில் சென்னை அடையாரில் உள்ள தேர்தல் அலுவலகமான 13 வது மண்டலத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அதனை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சாய் பாபா கோயிலில் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்பொழுது அவர் போட்டியிடக்கூடிய சின்னமான தாமரை பூவை கையில் வைத்துக் கொண்டு சாய் பாபாவை வழிபட்டார். 


மேலும் படிக்க | மோடி இருந்தால் நான் போக மாட்டேன்! ஒரு மாற்றம் வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி!


தமிழிசை சவுந்தரராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என்று கூறி தனது பெயருக்கு அர்ச்சனை செய்தார். பின்னர் சாய் பாபா தலையில் வைத்திருந்த தாமரை பூவை கோயில் குருக்கள் தமிழிசையிடம் கொடுத்ததும் மிகுந்த மகிழ்ச்சியில் சென்றார். அதை தொடர்ந்து தான் போட்டியிடக் கூடிய சின்னமான தாமரை பூவை கையில் ஏந்தியவாறு நடந்து சென்று காரில் ஏறி சென்றார். 


முன்னதாக கேரளா கண்ணூரில் புகழ்பெற்ற ஶ்ரீ முத்தப்பன் மடப்புரா கோயில் சாமி தரிசனம் செய்து அருள்வாக்கு சொல்லும் முத்தப்பன் சாமியிடம் ஆசி பெற்றார். முன்னதாக, தென்சென்னை நாடமன்ற வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முகநூல் பக்கத்தின் வாயிலாக பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கும், கோரிக்கைகளுக்கும் பதில் அளித்தார். தன்னை வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.


தெலங்கானா ஆளுநர் தமிழிசை சுந்தரராஜன்,மீண்டும் தேர்தல் அரசியலில் பிரவேசிப்பதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த நிலையில், தனது ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். 2019 வரை தமிழக பாஜக தலைவராக தமிழிசை சுந்தரராஜன் நீடித்த நிலையில், 2019 செப்டம்பர் மாதத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2021 பிப்ரவரி மாதத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டதையடுத்து, அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் 7 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்... யார் யார் மீண்டும் போட்டி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ