TN Congress Candidates List 2024: மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 7 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் என நன்கு பரிச்சயமான முகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதில் ஜோதிமணி கரூர் தொகுதியிலும், மாணிக்கம் தாக்கூர் விருதுநகர் தொகுதியிலும், விஜய் வசந்த் விருதுநகர் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதில் தற்போது ஆரணி தொகுதியில் மக்களவை உறுப்பினராக உள்ள எம்.கே. விஷ்ணு பிரசாத் இம்முறை கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரணி தொகுதியில் கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், விஷ்ணு பிரசாத் சௌமியா அன்புமணியின் சகோதரர் ஆவார்.
7 வேட்பாளர்கள் மட்டுமே அறிவிப்பு
கிருஷ்ணகிரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் தற்போது மக்களவை தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியும் ஒதுக்கப்பட்டது. இதில் புதுச்சேரியில் தற்போதைய மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளியாக மிகவும் தாமதமானது.
திமுக அதிமுக இடையே போட்டி... அண்ணாமலை ஜெயிக்க மாட்டார் - எஸ். பி. வேலுமணி தடாலடி
நெல்லை, மயிலாடுதுறை...?
அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சியினரின் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து, பரப்புரையையும் தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தாமதமானது பெரும் கேள்விகளை எழுப்பியது. அந்த வகையில், தற்போது முதல்கட்டமாக அக்கட்சி போட்டியிடும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர்கள் மட்டுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் முதல் கட்ட வாக்குப்பதிவான ஏப். 19ஆம் தேதியே தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நெருங்கும் வாக்குப்பதிவு?
வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி தேதியாக மார்ச் 27 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நிலையில், மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளவதற்கான கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
பாஜக தரப்பில் பிரதமர் மோடியும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்னும் பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போதுதான் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. இன்னும் மீதம் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை எப்போது அறிவித்து எப்போது முழுமையான பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கும் என்ற கேள்வியும் உள்ளது.
மேலும் படிக்க | சர்ச்சை கிளம்பியதும் உஷாரான இபிஎஸ் - நெல்லையில் வேட்பாளர் மாற்றம்... பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ