தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இது. தேர்தல் சமயத்தில் பல வாக்குறுதிகளை அறிவித்திருந்தது திமுக. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை எல்லாம் இன்னும் நிறைவேற்றாமல் உள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து அதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றன. இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் தான் தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க | ‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்.!
இந்த பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே குடும்பத்தலைவிகள் எப்படி பிரிக்கப்படுவார்கள்? அனைத்து குடும்பத்தலைவிகளுக்குமா அல்லது அதில் ஏதும் டிவிஸ்ட் வைப்பார்களா என்பது நாளை தெரிந்துவிடும். இந்த பட்ஜெட்டில் கல்வி கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதோடு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலேயே கல்வியை தொடரும் பட்சத்தில் அவர்களின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதோடு அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ராஜஸ்தான், சதீஷ்கர் மாநில அரசுகள் ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசும் இதை பின்பற்றி அறிவிப்பை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. திமுக சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் இமாலய வெற்றி பெற்றது. இதனால் இந்த பட்ஜெட்டில் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டிய சூழலில் ஆளும் கட்சி உள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து எதிர்கட்சிகளையும், மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்த நிலையில், இவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
மேலும் படிக்க | நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைப்பாடு என்ன?- தினகரன் கேள்வி
இந்த பட்ஜெட்டில் மின்கட்டணம் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்பதற்காக அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR