டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மிகிரன் என்பவர், 2006ல் சூப்பர்வைசராக நியமிக்கப்பட்ட நிலையில், 2015ல்  மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன் முறைப்படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.மேலும், சூப்பர்வைசர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை எனவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனம் துவங்கி 19 ஆண்டுகள் கடந்த பிறகும், பணி நியமனம், பதவி உயர்வுக்கான விதிகள் வகுக்கப்படாதது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, அரசியல் சட்ட விதிகளின்படி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.



மேலும், தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக இருந்தாலும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாமல் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை டாஸ்மாக்கில் நியமிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனவும், இது முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.


மேலும் படிக்க | கடா விருந்தில் பெண்களுக்கு அனுமதியில்லை! ஆண்களுக்கான சிறப்பு மட்டன் விருந்து


இந்த விவகாரத்தை கவனிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரரை சூப்பர்வைசர் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றிய விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


மேலும் படிக்க | பிசிசிஐ போட்ட அதிரடி உத்தரவு: ஆடிபோன ஐபிஎல் அணிகள் - தோனிக்கும் சிக்கல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ