கடா விருந்தில் பெண்களுக்கு அனுமதியில்லை! ஆண்களுக்கான சிறப்பு மட்டன் விருந்து

Mutton Feast Festival only for Men: ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் கடா விருந்து திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துக் கொண்டனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 13, 2022, 09:50 AM IST
  • ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் கடா விருந்து
  • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வயிறார உணவு உண்டனர்
  • பெண்களுக்கு அனுமதி இல்லை
கடா விருந்தில் பெண்களுக்கு அனுமதியில்லை! ஆண்களுக்கான சிறப்பு மட்டன் விருந்து title=

தஞ்சாவூர்: ஆடி மாதத்தில் பல்வேறு பண்டிகைகளும் நோன்புகளும் அனுசரிக்கப்படுகிறது. சிவன், அம்பிகை இருவருக்கும் உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் கடா வெட்டு விருந்தும் பிரபலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. சமைப்பது முதல் பூஜை செய்வது வரை அனைத்தையும் ஆண்களே செய்வார்கள். சாப்பிடுவதும் ஆண்கள் மட்டும் தான் என்பது இந்த கடாவெட்டு விருந்தின் சிறப்பான மற்றும் வித்தியாசமான அம்சம் ஆகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பலி பூஜை விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தளிகைவிடுதி கிராமத்தில் இந்த கடாவெட்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நல்லபெரம அய்யனார் முத்துமுனி ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி கெடா வெட்டு பூஜை நடைபெற்றது. 

மேலும் படிக்க | சூரியனின் பெயர்ச்சியால் ஜென்மாஷ்டமியில் இருந்து மகிழப்போகும் 4 ராசிகள்

200 ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு ஆடி மாதத்தின் கடைசி ஆடி வெள்ளி நாளான நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவில், அக்கரைவட்டம், சில்லத்தூர், வெட்டிக்காடு, திருவோணம், கறம்பக்குடி, தெற்கு கோட்டை, வடக்கு கோட்டை, கிளாமங்கலம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துக் கொண்டார்கள்.

இந்த பிரத்யேக திருவிழாவில்  800க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி, பூஜைகள் செய்யப்பட்டது. வெட்டப்பட்ட கிடாய்களை சமைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாகனங்களில் குவியல் குவியலாக கொண்டு வரப்பட்ட சாதம், சமைக்கப்பட்ட கறி என தடபுடலான விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலில், தரையில் வாழை இழை போட்டு கறி விருந்து தடபுடலாக நடந்தது.

இந்த திருவிழாவுக்கு வந்திருந்த ஆண்கள் சுட சுட ருசித்து உண்ட கடா விருந்து நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலாகின்றன

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி ஆகஸ்ட் 2022: சிம்மராசியில் சூரியன் மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள்

மேலும் படிக்க | சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகும் ராசி

 மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News