தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசுப்பள்ளியின் கட்டமைப்புகளையும், கல்வித்தரத்தையும் எடுத்துரைக்கும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் தொடக்கி வைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Udhayanidhi Stalin: ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது திமுக சட்டத்துறை - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்


இன்று முதல் வரும் 28-ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் வலம் வர இருக்கிறது. மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில், அரசு பள்ளிகளில் பல சலுகைகளை நாங்கள் கொடுக்கிறோம். இன்று அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகம் வருகிறார்கள். கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இருந்தாலும் மாவட்ட அளவில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் அறிவுரை படி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 


அரசு பள்ளிகளை மேம்படுத்த முதல்வர் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களது மாணவர்களை சேர்க்க வேண்டும். அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம். ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டமைப்புகளை பொறுத்து கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை கண்காணிக்க கட்டணம் ஆய்வுக்குழு இருக்கிறது என தெரிவித்தார்


மேலும் படிக்க | திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை! சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ