`தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்` - இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர்!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 137 வகையான மருந்து பொருட்கள் என 136 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை அனுப்பிவைக்க மத்திய அரசும் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து 'தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்' எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட மூட்டைகளில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை பொட்டலமிடும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் முதற்கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!
அடுத்த கட்டமாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் 24, 28 மற்றும் 31ம் தேதிகளில் 3 தவணைகளாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் இருந்து 1000 மெட்ரிக் டன் அரிசி சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை அருகே உள்ள பனையூர், சிந்தாமணி ஆகிய இடங்களில் உள்ள 12 அரிசி ஆலைகளில் இருந்து தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சேகரிக்கப்படும் அரிசி மூட்டைகள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளன.
இதனிடையே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் பணிகளிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பேரறிவாளன் விடுதலையை ஏற்ற அண்ணாமலை..! காண்டான காயத்ரி ரகுராம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR