ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS
சேலம் திட்டம்பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..!
சேலம் திட்டம்பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..!
மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் ரூ.565 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi palanisamy) இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி துணை நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையம், கண்ணந்தேரி ஏரி துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணை (Mettur Dam) திப்பம்பட்டியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் கூறியதாவது., மொத்தம் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அவர் தெரிவித்தார்.
ALSO READ | 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. "ஆல் பாஸ்" போட EPS உத்தரவு!
மேலும் அவர் கூறுகையில்., வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் கூறுகையில்., 5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிக்கடனை ரத்து செய்த அரசு AIADMK அரசு எனவும் குறுகிய காலத்தில் விவசாயிகளுக்காக மேட்டூர் - சரபங்கா உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது .இந்த உபரி நீர் திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தத் திட்டம் மூலம் 4 ஆயிரத்து 738 ஏக்கர் பாசன வசதி பெறும்.அம்மாவின் அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் பிரச்னை தீர்த்து வைத்தது. காவிரி டெல்டா (Cauvery Delta) பாசன விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வாதாரம் மேம்பட உரிய வழிவகை செய்து இருக்கிறோம். விவசாயிகளுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டிருக்கிறது .விவசாயிகள் புயல் மற்றும் வறட்சி தொடர் மழையால் பாதிக்கப்பட்ட போது பயிர்கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சுமார் 14 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் காவிரி குண்டாறு திட்டம் அறிவித்து புதுக்கோட்டையில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசு வேளாண் மக்களை காக்கும் அரசு. வேளாண் தொழிலாளர்களை காக்கும் அரசு.இதனால் வீடு, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றார் முதல்வர் பழனிசாமி.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR