திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 40. தனது மனைவியுடன் அதே சாலையோர உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் பேசிய வித்யா என்ற பெண் கண்ணனின் செல்போன் எண்ணுக்கு புதிய ஆஃபர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அதன்படி விலை உயர்ந்த ஓப்போ ஏ 12 என்ற செல்போன், ஆப்பர் விலையில் வெறும் ரூ.2500க்கு தருவதாக தெரிவித்துள்ளார்.


ரூ.2500ஐ அருகில் உள்ள தபால் நிலையத்தில் செலுத்தி செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சுமார் 25000 மதிப்புள்ள அந்த மாடல் செல்போன் தனது மகளின் இணையதள கல்விக்கு பயன்படும் என்று நினைத்த கண்ணன் தனக்கு செல்போன் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். 


மேலும் படிக்க | குரங்குப்பிடி வேண்டாம்மா: செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு


இதனை அடுத்து பல்லடம் தபால் நிலையத்திலிருந்து அழைத்த ஊழியர் ஒருவர் உங்களுக்கு பார்சல் வந்திருக்கிறது என்று அழைத்துள்ளார். அதன்பின்னர், அங்கு சென்ற கண்ணன் ரூ.2500 பணத்தை கொடுத்து அவரது மனைவி பெயருக்கு வந்திருந்த பார்சலை வாங்கி வந்துள்ளார்.


வீட்டில் வந்து அதனை பிரித்துப் பார்த்த அவரும் அவரது மனைவியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த பார்சலில் விலை உயர்ந்த செல்போனுக்கு பதிலாக தலை முடியின் ஈரப்பதத்தை காய வைக்கும் டிரையர் மெஷினும், அதனுடன் பழைய பவர் பேங்க் டப்பாவும் இருந்துள்ளது.


 மேலும் படிக்க | வம்புக்கு இழுக்கும் விவகார குழந்தை - வைரல் வீடியோ


மேலும் அந்த பவர் பேங்க் டப்பாவில் இருந்து எறும்பு கொல்லி மருந்து துகள்கள் விழுந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் நொந்து போயினர். இதனை அடுத்து தங்களை மோசடி செய்த ஆன்லைன் கும்பல் மீது பல்லடம் போலீசில் கண்ணன் புகார் அளித்துள்ளார்.


பல்லடத்தில் ஆன்லைன் மூலம் ஆஃபரில் குறைந்த விலையில் விலை உயர்ந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஆன்லைன் கும்பல் மீது எழுந்துள்ள புகார் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR