தமிழகத்தின் தாய்மார்கள் திமுகவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் : அமித் ஷா
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, பாஜகவின் ஸ்தாபன நாளும் ஆகும், அந்நாளில், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை மகத்தான் வெற்றியை பதிவு செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், இன்று தமிழ்நாட்டின் திருகோவிலூருக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஷ்ணு, சிவன் கோவில்கள் ஒரே சேர அமைந்துள்ள, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான் திருக்கோவிலூர் மண்ணை ககையெடுத்து கும்பிட்டு கொள்கிறேன் என்றார்.
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, பாஜகவின் (BJP) ஸ்தாபன நாளும் ஆகும், அந்நாளில், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை மகத்தான் வெற்றியை பதிவு செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
"காங்கிரஸ் -திமுக இரண்டும் லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு, குடும்பத்தின் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஆட்சி நிர்வாகத்தை, பிரதமர் மோதி வழியிலும் எம்ஜிஆர் வழியிலும் சிறப்பாக மேற்கொண்டு வரும் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், தமிழகத்தை வலர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார்கள்," என அமித்ஷா பாராட்டினார்.
"சமீபத்தில் திமுகவின் எம்.பி ஆ.ராசா மறைந்த தமிழக முதல்வரின் தாயாரைப் பற்றி மிகவும் அருவெருக்கத்தக்க வகையில், தரக்குறைவாக பேசியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா அவர்களையும் அவமானப்படுத்தியுள்ளார்கள். இதனால், தமிழகத்தின், மகளிர், தாய்மார்கள் திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்," என்றார் அமித் ஷா.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்கள் மீதும், தமிழ் மொழி மீதும் மிகவும் பற்று கொண்டவர். உலகில் எங்கு சென்றாலும் அவர் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசி வருகிறார். தமிழக மக்கள் மீது அக்கறை கொள்வதில் மோடிக்கு நிகர் யாரும் இல்லை” என்றார்.
மக்களுக்காக, வேலை செய்யும் எடப்பாடி வேண்டுமா? அல்லது ஒரு குடும்பத்திற்காக வேலை செய்யும் ஸ்டாலின் வேண்டுமா? என்பதை முடிவு செய்யக்கூடிய தேர்தலாக இது இருக்கும். இந்த தேர்தலுக்கு பிறகு கருணாநிதியின் குடும்பம் தலை எடுக்கக்கூடாது. வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR