பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களுக்கு பயம்தான். பொதுவாக பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் கவுன்சிலிங் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், தற்போது தமிழக அரசு, மாணவர்களுக்கு தவறாமல் கவுன்சிலிங் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தேர்வு பயத்தின் காரணமாக பல மாணவர்கள் தங்களது மதிப்புமிக்க உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மாநகர போக்குவரத்து கழகம்


நீட் தேர்வு உயர்படிப்பு முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரை இந்த அவலம் நீடிக்கிறது. இதனைக் களைய ஆசிரியர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ, அதைவிட பன்மடங்கு முக்கியத்துவம் பெற்றோர்களுக்கும் உண்டு. பெரும்பாலான வீடுகளில் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை பெற்றோர்களே உண்டாக்குகின்றனர். மார்க் எடுக்காத மாணவர்களை பிற மாணவர்களோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தும் பெற்றோர்கள் ஆங்காங்கே மாறி வந்தாலும், இன்னும் அதுமாதிரியான பெற்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுச்சமூக எண்ணம் ஆகிய நான்கும் கூட்டு சேர்ந்து தாக்கும் உளவியல் விளைவுகளின் பாதிப்புகள் முழுவதும் மாணவர்களையே வந்துசேர்கின்றன. பல சமயங்களில் அவர்களின் உயிருக்கே குறிவைக்கின்றன. 


அதுமட்டுமல்லாமல் கொரோனாவுக்குப் பிறகு வகுப்பறைகளிலும், பொதுத்தேர்வு அணுகுமுறைகளிலும் மாணவர்களின் உளவியலில் பெருமளவு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதன் உப விளைவுகள் குறித்து தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உரையாடி வருகின்றனர். ஆன்லைன் வகுப்புமுறை, மாணவர்களின் பள்ளிக்கட்டமைப்புச் சிந்தனைப் போக்கையே மாற்றும் அளவுக்கு நிலைமை உள்ளது. இவையெல்லாம் கடந்து தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதி முடித்துள்ளனர். 


ஜூன் மாதமே தேர்வு முடிவுகளை அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதனை திருத்தும் ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவாக சில அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் போது கடுமை காட்ட வேண்டாம் என ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பணியில் நீடிக்கத் தகுதியில்லை; ஊதிய உயர்வு பெற உரிமையில்லை: ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் ஷாக்


மாணவர்கள் ஒரு கேள்விக்கு விடை அளிக்க முயற்சி செய்து இருந்தாலே குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், சிறு சிறு தவறுகள் இருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கலாம் எனவும் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணை நெருங்கி இருந்தால், கூடுதலாக கருணை மதிப்பெண் போட்டு அந்த மாணவர்களை "பாஸ்" ஆக்கிவிடுமாறும் தமிழக அரசு வாய்மொழியாக ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR